--- --:--:-- --

இந்தியர்கள் 2 தவணை தடுப்பூசி செலுத்தி இருந்தாலும் செலுத்தாதவர்களாகவே கருதப்படுவார்கள்..!

3

பிரிட்டன் வரும் இந்திய பயணிகள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களாக இருந்தாலும் அவர்கள் தடுப்பூசி செலுத்தாதவர்களாகவே கருதப்படுவார்கள் என்ற பிரிட்டன் அரசின் புதிய கட்டுப்பாடுகள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்தியாவிலிருந்து வரும் பயணிகளுக்கான விதிமுறைகளை பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது. இதன்படி 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் உட்பட அனைவருக்கும் மூன்றாம் கட்ட பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

 

பிரிட்டனுக்கு பயணம் மேற்கொள்வதற்கு மூன்று நாட்கள் முன்பாக கொரொனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பின்னர் பிரிட்டனுக்குள் நுழைந்த இந்திய பயணிகள் மேலும் இரண்டு சோதனைகள் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

 

அத்துடன் பத்து நாட்கள் கட்டாயப் படுத்தும் நடவடிக்கைக்கும் உட்படுத்தப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் புதிய சுகாதார கொள்கையின்படி பிரிட்டன், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் ஆஸ்ட்ராஜெனகா, பைசர், மாடனா தடுப்பூசிகளை போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களாக கருதப்படுவார்கள்.

 

இதனால் பிரிட்டன் பல்கலைக்கழகங்களில் பல்வேறு படிப்புகளில் சேர காத்திருக்கும் இந்திய மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon