பிரபல உணவகத்தில் தோசையில் இருந்த கரப்பான் பூச்சி..!
டெல்லியில் உள்ள பிரபல உணவகத்தில் பெண் வாடிக்கையாளர் ஒருவர் வாங்கிய தோசையில் கரப்பான் பூச்சி இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் உள்ள மெட்ராஸ் ஸ்கார்பியோஸ் உணவகத்தில் பெண்பாடிக்கையாளர் ஒருவர் தோசை ஆர்டர் செய்துள்ளார். அவருக்கு வழங்கப்பட்ட உணவில் எட்டு கரப்பான் பூச்சி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வாடிக்கையாளர் இது தொடர்பான வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த சம்பவத்தை கடுமையாக விமர்சித்துள்ள நெட்டிசன்கள் இது ஏற்க முடியாதது என்றும், குறிப்பிட்ட அந்த உணவகத்தின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.






