டிவிட்டருக்கும் டிரம்ப்புக்கும் ஏற்பட்ட மோதல்!
தனது தளத்தில் நம்பகத்தன்மை இல்லாத தகவல்களை கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகி வரும் டுவிட்டர் சமூக வலைதளம் முதன் முறையாக அமெரிக்க அதிபரின் பதிவு ஒன்று நம்பகத் தன்மை அற்றதாக இருக்கிறது என்று தனது பயனர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
ட்விட்டர் தளத்தில் பதிவிட்ட அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தபால் ஓட்டுகள் பெருமளவு மோசடி நடைபெறும் என்று கூறியிருந்தார். இதை அடையாளப்படுத்திய டுவிட்டர் நிறுவனம் தபால் ஓட்டுகள் பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ளுங்கள் என்று தனது பயனாளர்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறது.
இவ்வாறு ட்விட்டரில் பதிவிட்டதைத் தொடர்ந்து மீண்டும் பதிவிட்ட டிரம்ப் ட்விட்டர் நிறுவனம் 2020 அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிடுவதாக குற்றம் சாற்றினார்.
சிஎன்என், வாஷிங்டன் போன்ற ஊடகங்களை போலி செய்தி நிறுவனங்கள் என்று விமர்சித்துள்ள டிரம்ப் அந்த நிறுவனங்கள் நடத்திய உண்மையை கண்டறியும் சோதனைகளின் அடிப்படையில் டுவிட்டர் நிறுவனம் தம் மீது குறை கூறுவதாக கண்டனம் தெரிவித்துள்ளார்.







