--- --:--:-- --

அத்தையை வழியனுப்ப அதிகாரிகளிடம் அனுமதி கேட்ட குழந்தை..!

4

விமான நிலையத்தில் தனது அத்தையை வழியனுப்ப அதிகாரிகளிடம் அனுமதி கேட்ட க்யூட் பேபியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்துஸ்தான் விமான நிறுவனம் இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது.

 

விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் சென்று அந்த குழந்தை தனது அத்தையை வழியனுப்ப அனுமதி கேட்கிறது. அதிகாரிகளும் அதற்கு அனுமதி அளித்த நிலையில் கடகடவென அத்தையை நோக்கி விரைந்து செல்கிறது.

 

அதை பார்த்த அந்த குழந்தையின் அத்தை ஓடி வந்து குழந்தையை தூக்கி அணைத்து முத்தமழை பொழிகிறார். கத்தார் நாட்டின் சர்வதேச விமான நிலையத்தில் அண்மையில் நடைபெற்றுள்ள அந்த குழந்தையின் செயல் காண்போர் நெஞ்சை நெகிழ வைக்கிறது.

Right Menu Icon