12 ஆம் வகுப்புக்கான மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் நாளை வெளியீடு..!
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான மறுகூட்டல் மறுமதிப்பீடு முடிவுகள் நாளை வெளியிடப்பட உள்ளது அரசு தேர்வுகள் துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நாளை காலை 11 மணிக்கு www.tn.dge.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு எண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்தால் மதிப்பெண் அடங்கிய தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.
இணையதளம் வாயிலாக விவரங்களை தெரிந்து கொள்ள முடியும் என்றும் மதிப்பெண் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமன் வர்மா தெரிவித்துள்ளார்.






