--- --:--:-- --

கொள்ளையர்களின் கூடாரமாக மாறிய பேருந்து நிலையம்..கதறும் பெண்..!

6

ங்கராபுரம் பேருந்து நிலையம் கொள்ளையர்களின் கூடாரமாக மாறி உள்ளதாக பயணிகள் அச்சமடைந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் செல்லமா. இவர் உறவினர்களின் சுப நிகழ்ச்சிக்காக தனியார் பேருந்து மூலம் சங்கராபுரம் பேருந்து நிலையம் வந்துள்ளார்.

 

அப்பொழுது ஐந்து சவரன் தங்கச் செயின் 1500 ரூபாய் ரொக்க பணத்துடன் தான் கொண்டு வந்த பை காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அலறியடித்துக்கொண்டு சங்கராபுரம் காவல் நிலையம் வந்து கண்ணீர் மல்கப் புகார் அளித்தார்.

 

மயங்கி விழுந்தவரை அங்கிருந்தவர்கள் மீது மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனிடையே சங்கராபுரம் கொள்ளையர்களின் கூடாரமாக மாறி உள்ளது என்றும் அடிக்கடி குற்ற சம்பவங்கள் நடக்கின்றன எனவும் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

 

Right Menu Icon