--- --:--:-- --

ராமர் கோயிலை திறந்த பிறகு முதன் முறையாக நடைபெறும் தீபோஸ்தவ்..!

5

தீபாவளி பண்டிகையைக்காக 28 லட்சம் அகல் விளக்குகளை ஏற்றும் நிகழ்விற்காக அயோத்தி நகரம் தயாராகி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தீபோஸ்தவ் என்ற பெயரில் அயோத்தியில் இலட்சக்கணக்கான விளக்குகளை ஏற்றும் நிகழ்வை உத்தரப்பிரதேச அரசு மேற்கொண்டு வருகிறது.

 

அயோத்தியில் ராமர் கோயிலை கட்டிய பிறகு முதன்முறையாக இந்த நிகழ்ச்சி நாளை மாலை நடைபெற உள்ளது. ராமரின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கும் விதமாக 18 அலங்கார ஊர்திகள் உருவாக்கப்பட்டுள்ளன.

 

அவை ஐரோப்பிய நகரம் முழுவதும் வலம் வரும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon