நாளை முதல் தனியார் பேருந்துகளில் 5 லட்சம் பேர் பயணம் செய்வார்கள்..!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு சார்பில் நாளை முதல் தனியார் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள கள்ளக்குறிச்சியில் இருந்து சென்னை கிளாம்பாக்கத்திற்கு செல்லும் புதிய பேருந்து சேவைகளை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர் கடந்த ஆண்டு தீபாவளிக்கு ஒரு லட்சத்தி பத்தாயிரம் பேர் முன்பதிவு செய்தனர்.
இந்த ஆண்டு நேற்றைய தினம் வரை ஒரு லட்சத்து 42000 பயணிகள் வரை முன்பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்த பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறிய அமைச்சர் சிவசங்கர் முன்பதிவு வைத்தால் கூடுதல் பேருந்துகளை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.





