கட்டுப்பாட்டை இழந்து சாலையோர கடையில் மோதிய பேருந்து..!
கேரளாவில் கோழிக்கோட்டில் இருந்து சுல்தான் பத்தேரி சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோர கடையில் மோதியது.
இதில் அந்த முதியவர் ஒருவர் உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தார். விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.





