--- --:--:-- --

செல்போன் பேட்டரி வெடித்து சிதறியதில் 8 மாத குழந்தை உயிரிழப்பு..!

7

மின்சாரம் மூலம் சார்ஜ் செய்தபோது செல்போன் பேட்டரி வெடித்து சிதறியதில் 8 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் வெளி மாவட்டத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி சுனில்குமார்.

 

மின்இணைப்பு இல்லாத குடிசையில் வசித்து வரும் இவர் மின்சாரம் இல்லாததால் சோலார் பேட்டரியை பயன்படுத்தி உற்பத்தியாகும் மின்சாரத்தை வைத்து குடும்பத்தை நடத்தி வருகிறார் .அந்த மின்சாரத்தை பயன்படுத்தி தனது செல்போனுக்கு சார்ஜ் ஏற்றியுள்ளார்.

 

அப்போது வீங்கிய நிலையில் இருந்த பேட்டரி திடீரென்று வெடித்ததில் அங்கிருந்து அவரது 8 மாத குழந்தை மீது பட்டு காயம் அடைந்துள்ளதை உடனடியாக குழந்தையை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் போய் விட்டது. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

Right Menu Icon