ஓட்டுனர் பயிற்சி அளித்த சகோதரன்.. ஆற்றில் கவிழ்ந்த கார்..!
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உப்பளாற்றில் கார் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளாகியுள்ளது. சிதம்பரம் அருகே சகோதரிக்கு கார் ஓட்ட பயிற்சி அளித்த பொழுது இந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
நாம்தேவ் என்பவர் தனது சகோதரி சுபாங்கிக்கு கார் ஓட்டுநர் பயிற்சி அளித்தபோது விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தெற்கு பிச்சாவரம் வடிகால் உப்பளாற்றில் கார் கவிழ்ந்து சுபாங்கி உயிரிழந்துள்ளார்.
ஆற்றில் விழுந்த நாம்தேவை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டுள்ளனர். ஆபத்தை உணராமல் சுயமாக ஓட்டுனர் பயிற்சி மேற்கொண்டதால் விபத்து நேரிட்டுள்ளது.






