பறிமுதல் செய்யப்பட்ட மாடுகளை பட்டியை உடைத்து கூட்டிச் சென்ற 3 பெண்கள்..!
சென்னை அடுத்துள்ள ஆவடி மாநகராட்சி திருமுல்லைவாயல் சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை அதிகாரிகள் அரசு பட்டியில் பிடித்து வைத்திருந்த நிலையில் பட்டியை உடைத்து மாடுகளை மீட்டு சென்றதாக கூறி மூன்று பெண்களை போலீசார் கைது செய்தனர்.
மாடுகளின் உரிமையாளரான தீபா என்பவர் தனது மாடுகள் காணாமல் போனதை தொடர்ந்து உறவினர்கள் உமா தேவி, மகாலட்சுமி ஆகியோரை அணுகி அரசின் பட்டியை உடைத்து மாடுகளை பிடிக்க வருமாறு கூறியுள்ளார்.
இதன்படி அத்துமீறி மாடுகளை பிடித்து சென்ற மூன்று பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.






