மனைவியை காணவில்லை என கணவர் புகார்.. காவல்துறை விசாரணை..!
ஆம்பூர் அருகே பட்டியலின ஊராட்சி மன்ற தலைவர் இந்துமதியை காணவில்லை என கணவர் புகார் அளித்துள்ளார். நாயக்கனேரி மலை கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பதவி பட்டியல் இன பெண்ணுக்காக ஒதுக்கப்பட்டது. போட்டியின்றி இந்துமதி என்பவர் வெற்றி பெற்றார்.
அவரை ஊருக்குள் அனுமதிக்காமல் கிராமத்தினர் போராட்டம் நடத்தினர். ஊருக்குள் செல்ல முடியாமல் இரண்டு ஆண்டுகளாக கிராமத்திற்கு வெளியே வசித்து வந்த இந்துமதியை காணவில்லை என புகார் எழுந்துள்ளது.






