--- --:--:-- --

மாடியில் இருந்து கீழே விழுந்த இளைஞரை தாங்கி பிடித்த சகோதரன்..!

3

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட சங்கரம்குலம் என்னும் கிராமத்தில் மாடியிலிருந்து தவறி விழுந்த சகோதரனை கீழே நின்று கொண்டிருந்த மற்றொரு சகோதரர் தனது மார்பில் தாங்கி காப்பாற்றிய காட்சிகள் இணையதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

 

இரு சகோதரர்களும் தங்களது வீட்டை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த பொழுது மாடியில் நின்று சுத்தப்படுத்திக் கொண்டிருந்த அவர் கால் இடறி கீழே விழுந்தார்.

 

இதை கண்டதும் உடனடியாக சுதாரித்துக் கொண்ட அண்ணன் தனது சகோதரனை மார்பில் தாங்கி காப்பாற்றினார். இந்த காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Right Menu Icon