திருமணத்தன்று ஓடிப்போன மணப்பெண்..! நஷ்ட ஈடு கேக்கும் மணமகன் வீட்டார்..!
சென்னை அடுத்த பூந்தமல்லியில் திருமணம் நடைபெறுவதற்கு முன் தினம் மணப்பெண் காணாமல் போனதால் நஷ்ட ஈடு கோரி மாப்பிள்ளை வீட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
செம்பரம்பாக்கத்தை சேர்ந்த இளைஞருக்கும், மதுராந்தகத்தை சேர்ந்த இளம் பெண்ணுக்கும் திருமணம் முடிவு செய்து நசரத்பேட்டையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவிருந்த நிலையில் மாப்பிள்ளை வீட்டார் மண்டபம் வந்துள்ளனர்.
பெண் வீட்டார் யாரும் வராததால் சந்தேகம் அடைந்த அவர்கள் பெண் வீட்டாருக்கு தொடர்பு கொண்ட போது மணப்பெண் காணாமல் போனது தெரிய வந்துள்ளது. இதில் மனம் உடைந்த மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டார் தங்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என புகார் அளித்துள்ளனர்.






