--- --:--:-- --

21 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் இல்லை..!

5

மிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க. பிளவை நோக்கி சென்றது. இந்தத் தேர்தலில் 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று 3-வது இடத்திற்கு அ.தி.மு.க தள்ளப்பட்டதால், அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது கடும் அதிருப்தி நிலவியது. இதன் காரணமாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் ஒரு அணியும் என பிரிந்தனர்.

 

 

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அவர் உட்பட 22 எம்.எல்.ஏ-க்களும், எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் உட்பட 25 எம்.எல்.ஏ-க்களும் வரிசை கட்டினர். இந்நிலையில், தமிழக சட்டமன்றத்தில் கடந்த மாதம் 13-ம் தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. அரசு வெற்றி பெற்றது. அக்கட்சிக்கு ஆதரவாக 144 வாக்குகளும், எதிராக 22 வாக்குகளும் கிடைத்தன. 5 பேர் நடுநிலை வகித்தனர். தி.மு.க. வெளிநடப்பு செய்தது.

 

 

சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், வேலுமணி தரப்பு எம்.எல்.ஏ-க்கள் விஜய் தலைமையிலான த.வெ.க-வுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்தனர். அவர்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகருக்கு கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதம் மீதான நடவடிக்கை குறித்து சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், தலைமைச் செயலகத்தில் நிருபர்களை சந்தித்தார்.

 

அப்போது அவர், “நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க.வுக்கு ஆதரவு அளித்த அ.தி.மு.க. உறுப்பினர்கள் 25 பேரை தகுதிநீக்கம் செய்யக்கோரி எடப்பாடி பழனிசாமி சார்பில் மனு அளிக்கப்பட்டது. இது தொடர்பாக, அவரிடம் இருந்து 4 கடிதங்கள் வரப்பெற்றன. அதன்பின்னர், 21 உறுப்பினர்கள் அளித்த விளக்கத்தை ஏற்று, அவர்களை மன்னித்து விடுவதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார். அவர் வழங்கிய 4 கடிதங்களை முறையாக ஆய்வு செய்தேன்.

 

 

எடப்பாடி பழனிசாமி 13-5-2026 அன்று அனுப்பிய கடிதத்தில் தெரிவித்தபடி, உறுப்பினர்களின் மன்னிப்பு கோரிக்கையை ஏற்றுக் கொள்கிறேன். அனைத்து மேல் நடவடிக்கைகளையும் கைவிடுகிறேன். எஞ்சிய 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோரியிருந்தார். அதன்படி, உறுப்பினர்கள் எஸ்.ஜெயக்குமார், மரகதம் குமரவேல், சத்தியபாமா, இசக்கி சுப்பையா மீது நடவடிக்கை தொடங்கிவிட்டது. என்ன நடவடிக்கை என்பது பிறகு அறிவிக்கப்படும்.” என்று சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon