கடந்த 4ம் தேதி 60க்கும் மேற்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடந்தது. இதில் ரூ.37.75 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் இது தொடர்பாக 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 64 பேர் மீது எப்.ஐ.ஆர் போட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பு தகவல் தெரிவித்துள்ளது.