நடனமாடியதால் புது மாப்பிள்ளையை உதறித் தள்ளிய மணமகள்..!
திருமண நேரத்தில் அதிக நேரம் நடனமாடிய மாப்பிள்ளையை வேண்டாம் என்று கூறிவிட்டு வேறு ஒரு ஆணை மணமகள் திருமணம் புரிந்துள்ளார். வட இந்தியத் திருமணங்கள் மிகச்சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று திருவிழா போல களைகட்டும்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில் ஏப்ரல் 22ஆம் தேதி மாலை 4 மணிக்கு திருமணம் நடைபெறுவதாக இருந்தது. மணமகன் வீட்டில் திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. மணமகன் வீட்டாரின் வருகையை எதிர்பார்த்து மணமகள் வீட்டார் காத்துக்கொண்டிருந்தனர்.
மணமகன் வீட்டார் ஆரவாரத்துடனும், ஆட்டம் பாட்டத்துடன் நிதானமாக வந்தனர். அவர்கள் பொறுமையாக மணமகள் வீட்டிற்கு வந்து சேர்வதற்குள் இருட்டிவிட்டது. அப்பொழுது இரவு 8 மணி. நான்கு மணி நேரம் தாமதமாக வந்ததை பார்த்து கொண்ட மணமகள் வீட்டார் மணமகன் மது அருந்தியதால் தான் தாமதம் என்பதை உணர்ந்து பொறுக்க முடியாத மணமகளின் தாயும் ஊர் பொதுமக்களும் அந்த மாப்பிள்ளையை வேண்டாம் என்று கூறிவிட்டனர். அத்துடன் உடனடியாக வேறு மாப்பிள்ளையை தேர்ந்தெடுத்து திருமணம் செய்து வைத்தனர்.





