ஒரு மணி நேரத்தில் 172 உணவுகளை சமைத்து சாதனை படைத்த சிறுவன்..!
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த 9 வயது சிறுவன் தனது விரைவான சமையல் திறமையால் மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். ஒரு மணி நேரத்தில் 172 உணவுகளை சமைத்துள்ள அப்துல்லா இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நுழைந்துள்ளார்.
மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது அவர் பெரும்பாலான நேரத்தை சமையலறையில் கழித்ததாகவும் மகனின் சமையல் ஆர்வத்தை கண்டு தான் ஊக்குவித்ததாகவும் அவரின் தாய் கூறியுள்ளார்.






