--- --:--:-- --

80 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த நபர்..!

5

பாலியல் வன்கொடுமை என்பது தப்பிக்க முயன்ற 80 வயது மூதாட்டியை கல்லால் அடித்துக் கொன்றவனை சிசிடிவி ஆதாரங்களை கொண்டு போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் அருகே உள்ள அரசு மருத்துவமனையில் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி தலையில் அடிபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.

 

தகவலறிந்து மூதாட்டியை மீட்ட போலீசார் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். முகத்தில் கல்லால் அடித்து கொல்லப்பட்ட காயமோ ரத்தப்போக்கும் இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

 

அதில் இறந்தவர் திருவெற்றியூர் மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து உதவி ஆணையர் ஆனந்த் குமார் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளியை போலீசார் தேடி வந்துள்ளனர்.

 

அதுமட்டுமின்றி எல்லையம்மன் கோவில் முதல் எண்ணூறு வரையில் உள்ள 40 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்துள்ளனர். அதில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒரு நபர் மூதாட்டி யுடன் பேசியது மட்டுமின்றி அவரை அழைத்து சென்றது தெரியவந்துள்ளது.

 

தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார் சந்தேகத்திற்கிடமான அந்த நபர் திருவொற்றியூரை சேர்ந்த ஜெயக்குமார் என்பதையும் அவன் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்ததையும் அறிந்துள்ளனர். பின்னர் ஜெயக்குமார் அழைத்து சென்று போலீசார் விசாரித்துள்ளனர்.

 

அதில் மது அருந்திவிட்டு சென்ற போது வழியில் மூதாட்டியை பார்த்ததும் அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக கூறி மறைவான இடத்திற்கு சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாகவும் அப்போது மூதாட்டி தப்பிக்க முயற்சித்ததால் அவரது தலையில் கல்லை போட்டு கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon