--- --:--:-- --

செல்போனை பறித்து சென்ற திருடனை விரட்டிய சிறுவன்..!

8

செல்போனை பறித்து சென்ற திருடனை விரட்டி சென்று பிடிக்க முயன்ற சிறுவனை காவல்துறையினர் பாராட்டியுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த நவீன் ஆறாம் வகுப்பு படித்து வருகிறான்.

 

இவரின் தம்பியிடம் இருந்து செல்போனை பறித்து சென்ற திருடனை விரட்டி சென்ற நவீன் அவரை பிடிக்க முயன்றுள்ளார். அப்போது திருடனின் பாக்கெட்டில் இருந்து செல்போன் தவறி விழுந்தது.

 

இருப்பினும் அந்த செல்போன் தங்களுடையது அல்ல என்பதை அறிந்த நவீன் அதனை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். சிறுவனின் செயலை பாராட்டிய காவல் நிலைய ஆய்வாளர் பரிசு வழங்கி பாராட்டினார்.

Leave a Reply

Right Menu Icon