7 பேர் விடுதலையை உறுதிசெய்ய வேண்டும் – ஓ.பி.எஸ்
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேர் விடுதலையை உறுதி செய்ய வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
விடுதலை குறித்து ஆளுநருக்கு அழுத்தம் தர முடியாது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியிருந்த நிலையில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளதாக விமர்சனம் செய்திருக்கிறார்.
நீட் தேர்வு பிரச்சினை போல 7 பேர் விடுதலையை திமுக நீர்த்து போக செய்து விட்டதோ என்ற எண்ணம் மேலோங்கி நிற்பதாக பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் உடனடியாக இந்த பிரச்சனையில் தலையிட்டு தனிப்பட்ட முறையிலும் திமுகவின் மக்களவை மாநிலங்களவை உறுப்பினர் மூலமும் மத்திய அரசுக்கு போதுமான அழுத்தத்தை கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.






