கடித்த பாம்பை அடித்துக்கொன்ற சிறுவன் – ஒரு வார சிகிச்சை முடிந்து நலம்..!
விஷப்பாம்பு கடித்து 3 நாட்கள் உடலில் விஷத்தன்மை உடன் இருந்த சிறுவன் ஒரு வார சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்தார். காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுவன் தர்ஷன் வழக்கம்போல் விளையாட சென்றார்.
அப்போது சிறுவனை விஷப்பாம்பு கடித்த நிலையில் அதனை அடித்துக் கொன்றுவிட்டார். பின்பு பெற்றோரிடம் சென்று தெரிவித்தார். பின்னர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சிறுவன் மேல்சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் மூன்று நாட்கள் கழித்து சிறுவனின் உடலில் விஷம் இருப்பதை உறுதி செய்தனர். பின்னர் ஒருவார சிகிச்சைக்கு பிறகு குணமடைந்து அந்த சிறுவன் வீடு திரும்பினார்.






