சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் நாளை வெளியாக வாய்ப்பு..!
நாடு முழுவதும் கொரொனா காரணமாக சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டன. இவர்களுக்கு செய்முறை தேர்வு மற்றும் ஆன்லைனில் நடத்தப்பட்ட தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கி முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த மாதம் 31-ஆம் தேதிக்குள் முடிவுகளை வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தேர்வு தொடர்பான பணிகள் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது என்றும், இந்த பணி விரைவில் நிறைவடையும் என்றும் நாளை 30ஆம் தேதி மாலையில் முடிவுகள் வெளியாவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் சிபிஎஸ்இ பள்ளி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.






