--- --:--:-- --

கொரொனாவால் ஏற்படும் காய்ச்சல் மூச்சுத்திணறலை தடுக்க மருந்து கண்டுபிடிப்பு..!

8

கொரொனாவால் ஏற்படும் காய்ச்சல் மூச்சுத்திணறல் ஆகியவற்றை தடுக்கும் மருந்துகளை கண்டுபிடிக்க உள்ளதாகவும் அதை பரிசோதித்து பயன்பாட்டுக்குக் கொண்டுவர அரசு உதவிட வேண்டும் எனவும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலை பயின்ற கௌதமி பாலசுப்ரமணியன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

 

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த கௌதமி பாலசுப்ரமணியன் தன்னுடல் தாக்கும் தீங்கு உள்ள நோய்கள் குறித்து ஆராய்ச்சி மேற் கொள்ளப்படுகிறது எனவும் ஆராய்ச்சியில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஆன்காலஜி முறை அங்கீகரிக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

கொரொனா தாக்கத்தால் ஏற்படும் வீக்கம், காய்ச்சல், மூச்சுத்திணறல், தடுப்பு மருந்தை கண்டுபிடித்து உள்ளதாகவும் அதனை பரிசோதிக்க ஆய்வகங்களை அமைக்க அரசு உதவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

இது தடுப்பு மருந்து இல்லை எனவும் கொரொனாவால் ஏற்படும் காய்ச்சல் மூச்சுத்திணறலை தடுக்க மட்டுமே பயன்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon