செல்போன் பேசிக் கொண்டிருந்த நபரை தாக்கிய கரடி..!
ரஷ்யாவில் சாலையில் நின்று செல்போன் பேசிக் கொண்டிருந்த நபரை கரடி ஒன்று தாக்கு துரத்தும் வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
தாக்கப்பட்டவர் இரண்டு வயது கரடியின் உரிமையாளர் என்பது தெரியவந்தது. குட்டி கரடி மற்றும் தாயை மர்ம நபர் சட்ட விரோதமாக கூண்டு வைத்து வளர்த்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






