--- --:--:-- --

திருப்பூரில் ஊடுருவிய வங்க தேசத்தினர் வேலைக்காக மட்டுமே வந்துள்ளனர்..!

3

திருப்பூர் மாநகரில் கடந்த 24 ம் தேதி தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆறு பங்களாதேஷ் நாட்டினரும், 25ம் தேதி அனுப்பர்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நான்கு பங்களாதேஷ் நாட்டினரும் மற்றும் 29ம் தேதி தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மூன்று பங்களாதேஷ் நாட்டினரும், முறையான அனுமதி பெறாமல் இந்தியாவிற்குள் சட்ட விரோதமாக நுழைந்த காரணத்திற்காகதான் 13 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

 

மேற்கண்ட 13 பங்களாதேஷ் நாட்டினரையும் விசாரணை செய்தபோது அனைவரும் தாங்கள் திருப்பூர் மாநகர பகுதிக்குள் வேலை தேடி மட்டுமே வந்துள்ளதாக வாக்குமூலம் அளித்தனர்.

 

கடந்த அக்டோபர் 9ஆம் தேதியன்று நாளிதழிலும் மற்றும் சமூக வலைதளங்களிலும் பிரசுரிக்கப்பட்ட “பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் முருகனந்தத்தை கொல்ல நடந்த சதி அம்பலம்! கைதான வங்கதேச ஆசாமிகள் வாக்குமூலத்தால் பரபரப்பு!!” என்ற செய்தி உண்மைக்கு புறம்பான செய்தியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon