விமானத்தில் நடுவானில் கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்தது..!
லண்டனில் இருந்து கொச்சின் வந்த ஏர் இந்தியா விமானத்தில் நடுவானில் கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்தது. 202 பயணிகளுடன் புறப்பட்ட விமானத்தில் இருந்த கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் விமானத்தில் பயணிகள் ஆக இருந்த இரு மருத்துவர்களும் நான்கு செவிலியர்களும் பிரசவம் பார்த்தனர்.
அந்தப் பெண்மணிக்கு நடுவானில் அழகான ஆண் குழந்தை பிறந்த நிலையில் உடனடி சிகிச்சைக்காக சேர்த்தனர். உடனடி சிகிச்சைக்காக ஜெர்மனியில் விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டு தாயும் குழந்தையும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்கள் நலமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






