--- --:--:-- --

சர்க்கார் பட பாணியில் ஓட்டுப் போட்ட பெண்..!

10

காஞ்சிபுரம் அருகே சர்க்கார் பட சேலஞ்ச் ஓட்டு போட்ட பெண்ணுக்கு அந்த பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் காட்டுப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பார்வதி. இவர் தனது கணவருடன் உத்திரமேரூர் பகுதியில் வசித்து வருகிறார்.

 

பாரதி தனது வாக்காளர் அடையாள அட்டையை உத்திரமேரூர் மாற்றாமல் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க சென்ற அவருக்கு முன்னதாகவே மற்றொருவர் பதிவு செய்துள்ளார்.

 

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து வாக்குப்பதிவு மையத்திற்கு வந்த வருவாய்த்துறை அதிகாரியிடம் முறையிட்டு சேலஞ்ச் ஓட்டை பதிவு செய்ய வைத்துள்ளனர்.

Right Menu Icon