--- --:--:-- --

தமிழகத்தில் சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூர் தேர்வு..!

6

மிழகத்தில் சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூர் தேர்வு செய்யப்பட்டிருப்பதை வரவேற்கும் மக்கள் அடிப்படை வசதிகளை உடனடியாக சரி செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

தமிழகத்தின் சிறந்த மாநகராட்சிக்கான விருது தஞ்சாவூர் மாநகராட்சிக்கு வழங்கப்படும் என்றும் சுதந்திர தினத்தன்று நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் விருது மற்றும் 25 லட்சம் ரூபாய் ரொக்கமும் வழங்க இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.

 

100 ஆண்டுகள் பழமையான நகராட்சியாக இருந்த தஞ்சாவூரை கடந்த 2011 ஆம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தினார் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா. தரம் மட்டுமே உயர்த்தப்பட்டதே தவிர எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தரவில்லை என்று மக்கள் குறை கூறுகிறார்கள்.

 

நகரில் 2006ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டம் முற்றிலும் செயலிழந்து சாக்கடை நீர் சாலையில் ஓடுவதாகவும் நகர் பகுதியில் மாநகராட்சி குப்பை கிடங்கு உள்ளதால் துர்நாற்றம் வீசுவதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.

Leave a Reply

Right Menu Icon