--- --:--:-- --

காஷ்மீரில் தடையை உடைத்து தப்பி சென்ற தீவிரவாதிகள்..!

5

காஷ்மீரில் பாதுகாப்பு படையினரின் தடையை உடைத்து தப்பி சென்ற தீவிரவாதிகளை தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது. சோபியான் மாவட்டத்தில் சில தீவிரவாதிகள் காரில் வருவதாக வந்த தகவலை அடுத்து பாதுகாப்பு படையினர் செக்போஸ்ட் அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

 

அப்போது வேகமாக வந்த காரை நிறுத்துமாறு சைகை காட்டி உள்ளனர். ஆனால் பாதுகாப்பு படையினரின் தடையை உடைத்துக் கொண்டு சென்ற அந்த காரை பாதுகாப்பு படையினர் விரட்டி சென்ற போதும் அதில் இருந்த தீவிரவாதிகள் தப்பி சென்றதாக கூறப்படுகிறது.

 

இதனையடுத்து அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

Leave a Reply

Right Menu Icon