இந்தியா – சீனா இடையே எல்லையில் பதற்றம்..!
இந்தியா – சீனா இடையே எல்லையில் பதற்றம் ஏற்பட்டு இருக்கும் சூழலில் லடாக்கில் நீண்ட நாட்களுக்கு படைகள் தங்குவதற்கான ஏற்பாடுகளைச் இந்திய ராணுவம் செய்து வருகிறது.
லடாக் எல்லைப்பகுதியில் அடுத்து வரும் மாதங்களில் அதிக குளிர் நீடிக்கும் என்பதால் அங்கு இருக்கும் வீரர்களுக்கு குடிநீரை கொதிக்க வைக்கும் ஹீட்டர்கள் குளிரை தாங்கும் பிரத்தியேக உடைகள், கூடாரங்கள், எரிபொருட்கள், உணவுப் பொருட்கள் ஆகியவை அனுப்பி வைக்கப்படுகின்றன.
கடல் மட்டத்திலிருந்து 10,000 அடிக்கும் உயரமான லே விமான நிலையத்திலிருந்து விமானப்படையின் சினூக் ரக ஹெலிகாப்டர்கள் மூலம் இந்த சரக்குகள் அனைத்தும் வீரர்களுக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
குளிரிலிருந்து வீரர்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக இந்த முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக பிரிகேடியர் ராகேஷ் மனோஜா தெரிவித்துள்ளார்.







