--- --:--:-- --

கர்நாடகாவில் ஒரே நேரத்தில் 2 கைகளால் எழுதி அசத்தும் 16 வயது சிறுவன்..!

5

ர்நாடக மாநிலம் மங்களூரில் சேர்ந்த 16 வயது சிறுமியான ஆதி சொருபா என்பவர் ஒரே நேரத்தில் இரண்டு கைகளாலும் வெவ்வேறு மொழிகளில் எழுதி அசத்துகிறார். சிறுவயது முதலே தீவிர பயிற்சி மேற்கொண்டு வரும் இந்த சிறுமி கண்ணை மூடிக்கொண்டு கரும்பலகையில் சர்வசாதாரணமாக எழுதுகிறார்.

 

ஒரு கையில் ஆங்கில மொழியிலும் மற்றொரு கையில் மற்றொரு மொழியிலும் எழுதும் இவர் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் என்ற வேகத்தில் எழுதுகிறார். கரும்பலகையில் ஒரே நேரத்தில் நேராகவும் கண்ணாடி பிம்பம் முறையிலும் அனாயசமாக எழுதுகிறார் ஆதி சொருபா.

 

சிறுமியின் சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவதற்காக அனுப்பப்பட்டுள்ளது. ஆதி சொருபா தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon