--- --:--:-- --

ஐஐடி வளாகத்தில் தற்காலிக ஊழியர் தீக்குளித்து தற்கொலை..! காரணம் என்ன..?

1

சென்னை ஐஐடி வளாகத்தில் தற்காலிக ஊழியர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் அவரது தந்தையிடம் கோட்டூர்புரம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

 

சென்னை ஐஐடி வளாகத்தில் ஹாக்கி விளையாட்டு மைதானத்தில் நேற்று எரிந்த நிலையில் ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது கோட்டூர்புரம் காவல்துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

 

அதில் இறந்து கிடந்தவர் கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த உன்னிகிருஷ்ணன் என்பது தெரியவந்தது. ஐஐடி மாணவர்களுக்கு புராஜெக்ட் பணிகளை செய்து கொடுக்க கடந்த ஏப்ரல் மாதம் அவர் தற்காலிக ஊழியராக இருந்தவர் அவர்தான்.

 

காவல்துறையினர் அங்கு சென்று சோதனையிட்டபோது தற்கொலை கடிதத்தை கைப்பற்றியுள்ளனர். தற்கொலை கடிதத்தில் குடும்பத்தை விட்டு பிரிந்து மிகுந்த மன அழுத்தத்தில் தான் இருந்ததாகவும் ஐஐடி மாணவர்களைப் போல் தன்னால் இருக்க முடியுமா என தெரியவில்லை என்றும் ஆங்கிலத்தில் எழுதி உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

தகவலறிந்து சென்னை வந்த உன்னி கிருஷ்ணனின் தந்தை பிரபுவிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதன் அடிப்படையில் காவல் துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக நிர்வாகம் சென்னை ஐஐடி விளக்கமளித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon