--- --:--:-- --

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை..!

8

மிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி உள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்தது. தமிழக ஆந்திர எல்லையில் மழை பெய்ததால் நாராயணபுரம், கலசம், தாராபுரம், திம்மாம்பேட்டை வழியாக ஆவாரம் குப்பம் பாலாற்றில் வெள்ளம் செல்கிறது.

 

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த தாமரைப்பாக்கம் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் மாலை வெளியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது. சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதிக்கு உட்பட்ட அரியலூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வாங்கியதால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Leave a Reply

Right Menu Icon