--- --:--:-- --

கோவை ஜல்லிக்கட்டு விழாவை காண வந்த தெலுங்கானா ஆளுநர் தமிழிசை !!!

5af4acc8-6716-4f88-ad7f-ec4cc1316cfc

கோவையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு விழாவைக் காண தெலுங்கானா ஆளுநரும், தமிழக பாஜக முன்னாள் தலைவருமான தமிழிசை செளந்தரராஜன் வருகை தந்தார். ஜல்லிக்கட்டை உற்சாகமாக கண்டு களித்த தமிழிசை, மாடுபிடி வீரர்களுக்கு பரிசுகளையும் வழங்கி உற்சாகப்படுத்தினார்.

 

கோவை செட்டிப்பாளையத்தில் இன்று காலையில் இருந்து ஜல்லிக்கட்டு விழா நடைபெற்று வருகிறது.
விழாவினை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

 

ஜல்லிக்கட்டில் 900 காளைகளும்,750 க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டு காளைகளை அடக்கி தங்களது வீரத்தை பறை சாட்டினர்.

 

இந்த ஜல்லிக்கட்டில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்,உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி ஆகியோரின் காளைகளும் வீராவேசத்துடன் பாய்ந்து சென்று அசத்தின.

 

இந்த நிலையில் தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளந்திர்ராஜன் சிறப்பு விருந்தினராக ஜல்லிக்கட்டு விழாவில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற காளையர்களுக்கும்,காளைகளுக்கும் பரிசுகளை வழங்கினார்.

Leave a Reply

Right Menu Icon