பழங்குடியின பெண்களுடன் நடனமாடிய தெலுங்கானா ஆளுநர் தமிழிசை – வைரலான வீடியோ
தெலுங்கானாவில் பழங்குடியின பெண்களுடன் அம்மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நடனமாடிய காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

தெலுங்கானா ஆளுநர் மாளிகையில் பழங்குடியினர் நலத் துறை அதிகாரிகளுடன் அம்மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆலோசனை மேற்கொண்டார் .இந்த ஆலோசனை கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக பழங்குடியின பெண்களுடன் தமிழிசை கலந்துரையாடினார். இதையடுத்து அவர்களுடன் இணைந்து பழங்குடியினரின் பாரம்பரிய நடனம் ஆடி மகிழ்ந்தார். மேள, தாளங்களுக்கு ஏற்றாற்போல் பழங்குடியின பெண்களுடன் தமிழிசை நடனமாடிய காட்சிகளை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து ,மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். ஏராளமானோர் இணையதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்





