--- --:--:-- --

திருமணமான 4 நாட்களில் இளம்பெண் விபத்தில் பலி..!

6

விருதுநகர் மாவட்டத்தில் திருமணமாகிய நான்கே நாட்களில் புதுமணப்பெண் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள மறவர்பெருங்குடியை சேர்ந்த சங்கர் என்பவருக்கும்முத்துமாரி என்பவருக்கும் கடந்த 13ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது.

 

புதுமண தம்பதியினர் ஆன ஷங்கர் ராஜாவும் முத்துமாரியும் விருதுநகர் மாவட்டத்தில் திருமணமாகிய நான்கே நாட்களில் புதுமணப்பெண் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  புதுமண தம்பதியினர் ஆன ஷங்கர் ராஜாவும் முத்துமாரியும் கடந்த 16ம் தேதி அருப்புக்கோட்டை அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு விருந்திற்காக சென்றுள்ளனர்.

 

விருந்தை முடித்துவிட்டு புதுமண தம்பதியினர் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது முத்துமாரி நிலைதடுமாறி இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்துள்ளார். இதில் முத்துமாரியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

 

இதனையடுத்து புதுமண பெண்ணுக்கு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார்.

 

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 17ஆம் தேதி முத்துமாரி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் முத்துமாரி உடலுறுப்புகள் குடும்பத்தினரின் சம்மதத்துடன் தானமாக அளிக்கப்பட்டது.

 

Leave a Reply

Right Menu Icon