10 புதிய அவசரகால ஊர்திகளின் சேவை தொடக்கி வைப்பு..!
தமிழக அரசின் பயன்பாட்டிற்காக 10 புதிய அவசரகால ஊர்திதிகளின் சேவையை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து தமிழக முதலமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நோயால் பாதிக்கப்படும் பொதுமக்கள் மருத்துவமனைகளில் சேர்ந்து உடனடியாக மருத்துவ வசதிகளை பெற்றுக் ஏதுவாக 108 இலவச ஆம்புலன்ஸ் சேவை திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த சேவையின் மூலம் இதுவரை ஆயிரத்து 303 வாகனங்கள் செயல்பாட்டில் உள்ளன.
திட்டத்தின் மூலம் இதுவரை ஒரு கோடியே 12 லட்சத்து 64 ஆயிரத்து க்கும் அதிகமான பொதுமக்கள் பயனடைந்துள்ளனர். அதில் ஒரு பகுதியாக கரூர் வைசியா வங்கி தனது சமூக பொறுப்புணர்வாக 1.77 கோடி ரூபாய் மதிப்பிலான 10 அவசரகால ஊர்திகளை தமிழக அரசுக்கு வழங்கியுள்ளது.
இதில் 8 அவசரகால ஊர்திகள் மலைப்பகுதியிலும், இரண்டு அவசரகால ஊர்திகள் மற்ற இடங்களிலும் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.







