பிளஸ் ஒன் மாணவியிடம் அத்துமீறிய ஆசிரியர்..!
கரூரில் பதினொன்றாம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட காவலரை கரூர் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறவர் இளவரசன்.
இவர் வெங்கம்பாளையத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இளவரசன் தனது வீட்டு அருகே வசிக்கும் பதினொன்றாம் வகுப்பு மாணவியுடன் அடிக்கடி பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. இது குறித்து மாணவி தனது தாயாரிடம் தெரிவித்திருக்கிறார்.
அவர் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடமும் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திடமும் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி காவலர் இளவரசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.





