டிரைவர் இல்லாமல் தெருக்களில் சுற்றும் டாக்ஸி..கடுப்பான மக்கள்..!
சான் பிரான்சிஸ்கோ தெருக்களில் டிரைவர் இல்லாமல் ரோபோ டாக்ஸிகள் வலம் வருவதாக புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் வெளியாகி உள்ளன. இது போன்ற ரோபோ டாக்ஸிகள் இடையூறாக இருப்பதாக அந்த மக்கள் புகார் தெரிவித்திருப்பதாக தகவலும் வெளியாகி இருக்கிறது.
கடுப்பான மக்கள் இப்பொழுது சான் பிரான்சிஸ்கோ தெருக்களில் சுற்றி தெரியும் டிரைவர்லெஸ் ஆட்டோமேட்டிக் டாக்சிகளை தடுத்து நிறுத்து துவங்கியுள்ளனர் என கூறப்படுகிறது.
இந்த டிரைவர் இல்லாத ஆட்டோமேட்டிக் டாக்சி கார்களை முடக்கும் வகையில் மக்கள் சாலையில் வைக்கப்பட்டிருக்கும் ஆரஞ்சு நிற பிளாஸ்டிக்கை டிரைவர் இல்லாத டாக்ஸிகளில் பேலட்டுகளில் வைக்க துவங்கியுள்ளனர்.
இப்படி செய்கையில் டிரைவர் இல்லாத டாக்ஸிகளில் கேமரா மறைப்பதால் அவை இருக்கும் இடத்தை விட்டு நகராமல் அப்படியே செயல்படாமல் நிற்கத் துவங்கி விடுகின்றன என்று கூறப்படுகிறது.






