--- --:--:-- --

ஊரில் கடன் பிரச்சனையால் பணியாற்றிய பெண்ணிடம் நம்பிக்கை துரோகம்..!

5

சென்னை மண்ணடியில் உடன் பணியாற்றிய பெண்ணிடமே ஏழு சவரன் சங்கலியை பறித்த வட மாநில இளைஞர் 2 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டார். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அவரை போலீசார் உடனடியாக சுற்றி வளைத்தனர்.

 

வாரணாசியை சேர்ந்த விபில்குமார் என்றவர் கடந்த ஆறு மாதமாக தனியார் எலெக்ட்ரிக் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்தார். விரைவில் ஊருக்கு செல்ல திட்டமிட்டு இருந்ததாகவும் ஊருக்கு சென்றால் கடன் காரர்கள் தொல்லை கொடுப்பார்களோ என்ற கவலையில் இருந்ததாகவும் விசாரணையில் அவர் கூறியுள்ளார்.

 

நண்பர்களிடம் கடன் கேட்டும் கிடைக்காததால் என்ன செய்வது என்றே தெரியாமல் இருந்த நிலையில் உடன் பணியாற்றிய பெண் பணி முடிந்து செல்லும் பொழுது மர்ம நம்பர் போல் பின்னால் சென்று வழிப்பறி செய்ததாகவும் அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

 

Right Menu Icon