தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி முதல்வர் கடிதம்..!
மாலத்தீவு கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் தூத்துக்குடி மாவட்டம் பரவை குளத்தில் இருந்து கடந்த 1ம் தேதி விசைப்படகில் புறப்பட்ட 15 மீனவர்கள் 23ஆம் தேதி மாலத்தீவு கடலோர காவல் படை வீரர்கள் கைது செய்யப்பட்டதை முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
உரிய தூதராக நடவடிக்கைகள் மூலம் மாலத்தீவு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படகுகளையும் பிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





