வந்தே மாதரத்துடன் தொடங்கிய பட்டமளிப்பு விழா: ‘தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-வது இடம்’ எனச் சர்ச்சை
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா சுமார் 45 நிமிடங்கள் தாமதமாகத் தொடங்கிய நிலையில், நிகழ்வின் தொடக்கத்தில் ‘வந்தே மாதரம்’ பாடல் பாடப்பட்டது.
தமிழ்த்தாய் வாழ்த்தை இயற்றிய மனோன்மணியம் சுந்தரனார் பெயரிலான பல்கலைக்கழகத்திலேயே, வழக்கமாக முதன்மையாகப் பாடப்படும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை அளிக்கப்படாமல் 3-வதாகப் பாடப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.






