--- --:--:-- --

மேகதாது அணை விவகாரம்: கர்நாடகாவுடன் மத்திய அரசு கூட்டுச் சதி செய்கிறது – அன்புமணி

3

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுடன் இணைந்து மத்திய அரசு தமிழகத்திற்கு எதிராக சதி செய்து வருவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

 

 

காவிரி ஆற்றில் அணை கட்ட தமிழகத்தின் ஒப்புதல் கர்நாடகாவுக்கு தேவையில்லை என உச்சநீதிமன்ற தீர்ப்பில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ள சூழலில், இதற்கு தமிழக அரசு தீவிரமாக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும், அடுத்தகட்ட சட்ட மற்றும் அரசியல் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், தமிழகத்தின் நீர்வள உரிமையை பாதுகாக்க அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டார்.

Leave a Reply

Right Menu Icon