திறமையான இந்தியர்கள் ஜெர்மனி வருமாறு அழைப்பு!
அமெரிக்காவின் எச்1பி விசா சர்ச்சைக்கு மத்தியில் திறமையான இந்தியர்களுக்கு ஜெர்மனி அரசு அழைப்பு விடுத்துள்ளது.
ஜெர்மனியின் குடியேற்றக் கொள்கைகள் நம்பகமானவை என்றும் பல்வேறு துறைகளில் இந்தியர்களுக்கு சிறந்த வேலை வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவித்து ஜெர்மனி தூதரகம் வீடியோ வெளியிட்டுள்ளது.






