மாதம்பட்டி ரங்கராஜ்-க்கு போலீசார் சம்மன்..!
திருமண மோசடி புகாரில் மாதம்பட்டி ரங்கராஜ்-க்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். நீலாங்கரை காவல்நிலையத்தில் நாளை மறுநாள் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா திருமண மோசடி புகார் அளித்திருந்த நிலையில் இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது






