ஸ்வப்னா சுரேஷ் குரல் பதிவு – அமலாக்கத் துறை மீது கேரள காவல்துறையினர் வழக்கு பதிவு
தங்க கடத்தல் வழக்கு விவகாரத்தில் அமலாக்கத் துறை மீது கேரள காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ் கடந்த ஆகஸ்ட் மாதம் அமலாக்கத் துறையினர் விசாரித்து அப்போது முதலமைச்சருக்கு எதிராக வாக்குமூலம் தரக்கோரி தன்னை அமலாக்கத் துறையினர் வற்புறுத்தினர் என ஸ்வப்னா சுரேஷ் குரலில் இருந்த அந்த பதிவில் இருந்தது.
அதனால் தான் வப்னா சுரேஷ் ஒப்புக்கொண்டிருந்தார். இந்த நிலையில் அமலாக்கத் துறை மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த முதலமைச்சர் விஜயன் சட்டவிரோதமாக ஒரு செயலை செய்யும் போது தங்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை பாயும் என்பதை அதிகாரிகள் உணர்ந்திருக்க வேண்டும் என்றார்.
மத்திய அரசு அமைப்பிற்கு எதிராக மாநில காவல்துறை வழக்கு தொடர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூதரகங்களுக்கும் வழங்கப்பட்டு வந்த சிறப்பு சலுகைகளை பயன்படுத்தி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளாவுக்கு தங்கம் கடத்தி வரப்பட்ட புகாரில் வப்னா சுரேஷ் சந்திப்பில் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட விசாரித்து வருகின்றனர்.
அது தொடர்பான வழக்கை அமலாக்கத்துறை தேசிய புலனாய்வு முகமை சுங்கத்துறை அரசு அமைப்புகள் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.







