நாளை முதல் அனைத்து பள்ளிகளிலும் சர்வே..!
நாளை முதல் மாநிலம் முழுவதும் கற்றல் அடைவுகள் தொடர்பான ஆய்வுகள் தொடங்க இருக்கின்றன. மூன்று நாள்கள் நடைபெறவிருக்கும் இந்த ஆய்வுகளில் 3ஆவது, 5ஆவது, 8ஆவது படிக்கும் மாணவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
ஒவ்வொரு வகுப்பிலும் 20 மாணவர்கள் இந்த சர்வேயில் பங்கு பெறுவர். இதன் முடிவுகளின் அடிப்படையில் கல்வியின் தரம், மாணவர்களின் திறன் ஆகியவை கணக்கிடப்பட்டு அடுத்த ஆண்டுக்கு பயன்படுத்தப்படும்.





