ஈரோடு : 53 தொடக்கப் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
கடந்த 2021ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளுக்கும் சட்டமன்ற தேர்தல் நடந்தது. அப்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா உடல்நலக்குறைவால் மறைந்தார்.இதனால் 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
இதில் போட்டியிட்ட திருமகன் ஈவெராவின் தந்தையும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.-வானார்.ஆனால், உடல்நலக்குறைவால் கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானதால், தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இந்த இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை தேர்தல் நடைபெறவுள்ளது.இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குச்சாவடி மையங்களாக செயல்படும் 53 தொடக்கப் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.அதேபோல் ஆசிரியர்கள் மட்டும் பள்ளிகளுக்கு கட்டாயம் வரவேண்டும் என்றும் ஈரோடு மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.





